Tamil Murasu

Tamil Murasu

Tamil Murasu (தமிழ் முரசு) has been Singapore's top Tamil language newspaper since its establishment in 1935.

National
English, Tamil
Newspaper, Online/Digital

Outlet metrics

Domain Authority
31
Ranking

Global

#158339

India

#18738

News and Media

#512

Traffic sources
Monthly visitors

Articles

  • 3 weeks ago | tamilmurasu.com.sg | G Krishnan

    பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதிக்கு மக்கள் செயல் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்குப் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தலைமை ஏற்பார். அந்தக் குழுத்தொகுதியில் அக்கட்சி சார்பாக இரு புதுமுகங்களும் களமிறங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் திரு சீ தவிர திரு சக்தியான்டி சுபாட்டும் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டனர்.

  • 3 weeks ago | tamilmurasu.com.sg | G Krishnan

    புதுடெல்லி, ஏப். 18- ‘மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதா, இல்லையா என முடிவு எடுக்க அதிபருக்கே கெடு விதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிப்பது, ஜனநாயக அமைப்புகள் மீது அணு ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானது என்று இந்திய துணை அதிபர் ஜக்தீப் தன்கர் ஆவேசமாகப் பேசியுள்ளார். சட்ட மசோதாக்கள் தொடர்பில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அரசுக்கும் நீதித்துறைக்குமான அதிகார வரைமுறை குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

  • 3 weeks ago | tamilmurasu.com.sg | G Krishnan

    கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்தில் ஒரே நேரம் 10 ஆயிரம் பேர் ஒன்று கூடினர். அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் ஆயுதங்களை அவர்கள் பறித்துக்கொண்டதாக உயர் நீதிமன்றத்தில் மாநில அரசின் அறிக்கை கூறியது. நாடாளுமன்ற வக்ப் வாரிய சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காள முர்ஷிதாபாத் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

  • 3 weeks ago | tamilmurasu.com.sg | G Krishnan

    அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் உலக நாடுகளுக்கு இடையிலான உறவு முறை அடிப்படை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அது உலக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார். விதிமுறைகள் அடிப்படையிலான உறவு முறையிலிருந்து மாறுவது என்பது ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை தானே பார்த்துக்கொள்ள வேண்டும் எனப் பொருள்படும் என்று திரு சண்முகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17ஆம் தேதி) விளக்கினார்.

  • 1 month ago | tamilmurasu.com.sg | G Krishnan

    கோலாலம்பூர்: அமெரிக்கா அந்நாட்டில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு எதிராக விதித்துள்ள வரிகளை எதிர்கொள்ள அந்நாட்டுக்கு எதிராக மற்ற நாடுகளை தனது அணியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது சீனா. இதன் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15ஆம் தேதி) மூன்று நாள் பயணமாக மலேசியாவுக்கு வருகை புரிகிறார் சீன அதிபர் ஸி ஜின்பிங். சீன அதிபர் இவ்வாண்டு மேற்கொள்ள உள்ள உயர்நிலைப் பயணங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Tamil Murasu journalists